லாஸ்லியா என்ன சொல்லபோகுதோனுக்கு திக் திக்குனு இருக்கு: பிரபல நடிகையின் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் முதல் நாளில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டும் வரும் கமெண்டுக்களில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும் பலர் திரைப்படங்களை விமர்சனம் செய்வது போல் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'எங்க பிளாட்ஸ்ல எல்லா வீட்டுலயும் குழந்தைகளாம் பாக்குறாங்க.... குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது? பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் வீட்டில் ஒரே அழுகாச்சியாக இருப்பது குறித்து குறிப்பிட்ட கஸ்தூரி, 'இதே சேனல்ல "கதையல்ல.. னு" சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க... அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக் என்றும், போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிழியபோறீங்க...
இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு என்றும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.
போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க... இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு...
— Kasturi Shankar (@KasthuriShankar) June 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout