ஊருக்குதான் உபதேசமா? ஆளுங்கட்சியினர்களின் அடாவடியை தட்டி கேட்கும் கஸ்தூரி

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவர் சேலம் நெடுஞ்சாலையில் மது அருந்திவிட்டு வாகனத்தில் சென்றுள்ளதை மடக்கிய பெண் போலீஸ் ஒருவர் அவரிடம் விசாரணை செய்கிறார்.

ஊரடங்கு அமலில் உள்ளபோது உங்களுக்கு எங்கிருந்து மது கிடைத்தது? என பெண் காவலர் விசாரணை செய்ய அதற்கு அதிமுக பிரமுகர் “உன்கிட்ட பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என திமிராக பதில் கூறியதோடு போலீஸ் எச்சரிக்கையையும் மீறி காரை எடுத்து கொண்டு வேகமாக கிளம்பி விடுகிறார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ‘ஊருக்குத்தான் உபதேசமா? என்ற கேள்வி எழுப்பி ஒரு டுவிட்டை பதிவு செய்துகிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இவரு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக விவசாய அணி செயலாளராம். அரசும் அமைச்சர்களும் அன்னாடம் மக்களை கெஞ்சிக்கிட்டுருக்காங்க. அவங்க கட்சிகாரங்களே மதிக்கலை. 144ல கூட சரக்குக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை போல. பெண்ணுன்னும் பாக்கல, போலீஸுன்னும் பாக்கல. அப்போ ஊருக்குதான் உபதேசமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.