ஒரு எம்.பி நிச்சயம்: பாமகவு கூட்டணி குறித்து நடிகை கஸ்தூரி கருத்து
- IndiaGlitz, [Tuesday,February 19 2019]
அதிமுக கூட்டணியில் பாமக ஏழு மக்களவை தொகுதிகளையும் ஒரு மாநிங்களையும் தொகுதியும் பெற்றுள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் டாக்டர் ராமதாஸ், 'இது மக்கள் நலனில் அக்கறை கொண்ட வெற்றி கூட்டணி' என்று கூறினார்.
இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்து திமுக தலைவர்கள் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அரசியல்வாதிகள் குறித்து தனது டுவிட்டரில் நையாண்டியாக கருத்து கூறி வரும் நடிகை கஸ்தூரி இந்த கூட்டணி குறித்து கூறுகையில், 'எப்போதுமே பாமகவுக்கு NDA வில்தான் அதிக சீட்டு கிடைக்கும். BJP கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள் - வென்றது 1 மட்டுமே. இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு MP பதவி நிச்சயம் . வேறு என்ன வேண்டும்? என்று கூறியுள்ளார். ஒரு மாநிலங்களவை தொகுதி கிடைத்ததையே அவர் 'வென்றாலும், வெல்லாவிட்டாலும் ஒரு எம்.பி' என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி புரட்சி பண்ணிரலாம். திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி ??♀️புரட்சி பண்ணிரலாம்.
— Kasturi Shankar (@KasthuriShankar) February 17, 2019
திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? ??
எப்போதுமே பாமகவுக்கு NDA வில்தான் அதிக சீட்டு கிடைக்கும். BJP கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள் - வென்றது 1 மட்டுமே. இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு MP பதவி நிச்சயம் . வேறு என்ன வேண்டும்? #வெற்றிதான்கொள்கை. #பதவித்தான்பாலிசி #powerOfPower
— Kasturi Shankar (@KasthuriShankar) February 19, 2019