கமல் எழுதிய கவிதையை 'குணா' பாணியில் கலாய்த்த பிக்பாஸ் நடிகை

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கவிதை நடையில் சில கருத்துக்களை தெரிவித்து வருவது வழக்கமான ஒன்றே. கமல்ஹாசனின் கவிதைகள் பலருக்கு புரியாதவாறு இருந்தாலும் புரிந்தவர்களுக்கு அதில் உள்ள அர்த்தம், எவ்வளவு ஆழமானது என்பது தெரியும்

அந்த வகையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு குறித்த மத்திய அரசின் அறிவிப்பு வந்ததும் கமல் தனது டுவிட்டரில் ஒரு கவிதையை வெளியிட்டிருந்தார். அந்த கவிதை இதுதான்:

ஊரடங்கும் உயிருக்கு பயந்து - பிணி
உமக்கடங்காது புரிந்து கொள்வீர்.
தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது.
நீர், போதாதிதற்குயாமும் வேண்டும்.
மக்களைக் காக்க மக்களே மருந்து.
மனம் மாறு, அரசே
மதம் மாறவல்ல
எம் கட்டளை
மனிதனை நேசிக்க வேண்டுகோள்

இந்த கவிதையை ஒருசிலர் ரசித்து பாராட்டியும் பெரும்பாலானோர் கலாய்த்தும் வந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான கஸ்தூரி ஒரு டுவிட்டை ‘குணா’ படத்தில் கமல் பேசிய வசனம் ஒன்றின் பாணியில் கலாய்த்துள்ளார். அவரது டுவீட் இதுதான்:

”இது லெட்டர் சீ மடல் இல்லை கடுதாசின்னு வச்சுப்போமா? வேண்டாம் கடிதமே இருக்கட்டும் . இலக்கணப்படி இந்த கவிதை எந்த வகை?”

கஸ்தூரியின் இந்த கலாய்ப்பு டுவிட்டுக்கு கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 37,776 என இருந்த நிலையில் சற்றுமுன் மத்திய அரசு அறிவித்த தகவலின்படி இந்தியாவில்

200 ரூபாய் கொடுத்தால் போதும், நடிகை ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடலாம்

200 ரூபாய் கொரோனா வைரஸ் தடுப்பு நிதி உதவி செய்தால் போதும் நடிகை ஸ்ரேயா சரணுடன் டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஓரினச்சேர்க்கை குறித்து அறிந்து கொள்ளவே இந்தியர்கள் விரும்புவதில்லை: பிரபல நடிகை

ஓரினச்சேர்க்கை மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்து அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவுமே இந்தியர்கள் முன்வருவதில்லை என்று பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா தமன்னா? வைரலாகும் வதந்தி

தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் நடித்து வரும் தமன்னா, இதுவரை திருமணம் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்காத நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்

கோயம்பேடு சந்தையால் 119 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: 

சமீபத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நான்கு நாட்கள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் நான்கு நாட்களுக்குரிய காய்கறிகள், மளிகைப்பொருட்களை