ஹவுஸ்மேட்ஸ் கவனமாக இருங்கள்: சுசித்ரா வருகையை கிண்டல் செய்த நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த வாரம் ரேகா வெளியேறியதும், அதே வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அர்ச்சனா உள்ளே வந்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே இருக்கின்றனர்
இந்த நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியேற உள்ள நிலையில் வைல்ட்கார்டு எண்ட்ரியாக மீண்டும் ஒருவர் உள்ளே வரவுள்ளார் என்றும் அவர்தான் பாடகி சுசித்ரா என்றும் வெளிவந்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சுசித்ராவின் வருகை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் நடிகையும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சுசித்ரா வரவை கிண்டல் செய்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமரா கண்டண்ட்டுக்கே ஊரே அலறிச்சு... இங்கே 100 கேமெரா ! ஹவுஸ்மேட்ஸ் அவரிடம் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார்.
கஸ்தூரியின் கிண்டலுக்கு சுசித்ரா உள்ளே போகும் முன்னரே பதிலடி கொடுப்பாரா? அல்லது பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற பின்னர் பதிலடி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Suchileaks புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமரா contentக்கே ஊரே அலறிச்சு... இங்கே 100 கேமெரா ! Housemates strictly maintain social distance! ??#BiggBoss4Tamil #wildcard #RJSuchitra #MeeraMitun2point0
— Kasturi Shankar (@KasthuriShankar) October 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments