ரஜினி பிறந்த நாளில் கலக்கலான காரியத்தை செய்த கஸ்தூரி

  • IndiaGlitz, [Wednesday,December 12 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமும், இந்திய அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அவ்வப்போது ரஜினியின் அரசியல் குறித்து விமர்சனம் செய்திருந்தாலும் இன்று அவருடைய பிறந்த நாளில் அனைவரும் பாராட்டும் வகையில் ஒரு காரியத்தை செய்துள்ளார்.

ஏழைக்குழந்தைகள் சிலரை தேர்வு செய்து அவர்களை ரஜினி நடித்த '2.0' திரைப்படத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அந்த குழந்தைகளின் முகத்தில் 3 மணி நேரம் கிடைத்த சந்தோஷத்தை ரஜினியின் பிறந்த நாளுக்கு பரிசளிப்பதாக கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, மானு மிஷன் முயற்சியில், லைகா புரடொக்சன்ஸ் ஆதரவில், 2.0 சிறப்பு காட்சி. .வேதனையை மறந்து 3 மணி நேரம் உற்சாகமாக மகிழ்ந்த இந்த குழந்தைகள் சிரிப்பையும், அவர்கள் குடும்பத்தினர் ஆனந்தக்கண்ணீரையும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக்குகிறேன் என்று கஸ்தூரி தனது சமூக வலைத்தள பகக்த்தில் பதிவு செய்துள்ளார்.

 

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' டீசர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சற்றுமுன் அவர் நடித்த 'பேட்ட' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக

யோகிபாபுவுக்கு ஜோடியாகின்றாரா யாஷிகா?

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு, தற்போது அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் கலக்கி வருகிறார்

பாஜக தோல்விக்கான காரணத்தை கூறிய விஷால்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்த நிலையில்

வெற்றிகள் தொடரட்டும்: ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 69வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்களும் அரசியல தலைவர்களும் கோடிக்கணக்கான ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல் திருமண நாளில் அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட வீடியோ

பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, கடந்த ஆண்டு இதே நாளில் அதாவது டிசம்பர் 11ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியை திருமணம் செய்தார்