ரஜினி பிறந்த நாளில் கலக்கலான காரியத்தை செய்த கஸ்தூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமும், இந்திய அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அவ்வப்போது ரஜினியின் அரசியல் குறித்து விமர்சனம் செய்திருந்தாலும் இன்று அவருடைய பிறந்த நாளில் அனைவரும் பாராட்டும் வகையில் ஒரு காரியத்தை செய்துள்ளார்.
ஏழைக்குழந்தைகள் சிலரை தேர்வு செய்து அவர்களை ரஜினி நடித்த '2.0' திரைப்படத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அந்த குழந்தைகளின் முகத்தில் 3 மணி நேரம் கிடைத்த சந்தோஷத்தை ரஜினியின் பிறந்த நாளுக்கு பரிசளிப்பதாக கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது, மானு மிஷன் முயற்சியில், லைகா புரடொக்சன்ஸ் ஆதரவில், 2.0 சிறப்பு காட்சி. .வேதனையை மறந்து 3 மணி நேரம் உற்சாகமாக மகிழ்ந்த இந்த குழந்தைகள் சிரிப்பையும், அவர்கள் குடும்பத்தினர் ஆனந்தக்கண்ணீரையும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக்குகிறேன் என்று கஸ்தூரி தனது சமூக வலைத்தள பகக்த்தில் பதிவு செய்துள்ளார்.
#MAnuMission முயற்சியில் , @LycaProductions ஆதரவில், 2.0 special show . .வேதனையை மறந்து 3 மணி நேரம் உற்சாகமாக மகிழ்ந்த இந்த குழந்தைகள் சிரிப்பையும், அவர்கள் குடும்பத்தினர் ஆனந்தக்கண்ணீரையும் @rajinikanth அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக்குகிறேன். #HBDSuperStarRajinikanth pic.twitter.com/vsWrwqxaNe
— Kasturi Shankar (@KasthuriShankar) December 12, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com