நான் கிழவின்னா என்னைவிட 5 வருசம் அதிகமான அஜித் யார்? கஸ்தூரி ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரில் பிரச்சினை இருந்து வருகிறது என்பதும் ஒரு சில ரசிகர்கள் எல்லை மீறியதையடுத்து அஜீத் மற்றும் அவரது மேனேஜருக்கு கஸ்தூரி டுவிட்டரின் மூலமே புகார் அளித்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மீண்டும் கஸ்தூரியை அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுக்க, அதற்கு கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபுவுடன் கஸ்தூரி நடித்த பழைய வீடியோ ஒன்றை பதிவு செய்த அஜீத் ரசிகர் ஒருவர் ’இது நம்ம கஸ்தூரி கிழவிதானே! அந்த காலத்தில் சரியான ஃபிகரா இருந்திருப்பார் போல’ என்று பதிவு செய்துள்ளார்
இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, ‘எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் அவர்கள் கேட்டாரா? அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதுல காமெடி என்னன்னா, கஸ்தூரி ‘கிழவி’, அஜித்தை விட ஐந்து வயது குறைந்தவர்’ ஹைய்யோ ஹையோ’ என்று பதிவு செய்துள்ளார். ரசிகரின் டுவிட்டர் பதிவும், அதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரியின் பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மேலும் நடிகை கஸ்தூரி இன்னொரு டிவிட்டில் ’தயவுசெய்து அஜித் ரசிகர்களுக்கு கூறுவது என்னவெனில் இதுபோன்ற மோசமான பதிவுகளை செய்து அஜித் குமார் அவர்களின் உண்மையான ரசிகர்களை களங்கப்படுத்த வேண்டாம்’. எனக்குத் தெரிந்தவரை அஜித் ஒரு ஜென்டில்மேன். அவரை தான் மிகவும் மதிக்கின்றேன். அவருடைய உண்மையான ரசிகர்கள் உண்மையிலேயே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடும் ரசிகர்களை தவிர்த்து வையுங்கள்’ என்றும் கூறியுள்ளார்
This thread.
— Kasturi Shankar (@KasthuriShankar) August 2, 2020
எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? Ajith sir கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு?
Ithula comedy ennanna, Kasturi 'kilavi' is five years younger to Ajith Sir. Haiyo Haiyo. https://t.co/IQXPxTod3J
I Humbly request no one to use this as an opportunity to defame Mr AjithKumar , who is a perfect gentleman that I admire a lot.
— Kasturi Shankar (@KasthuriShankar) August 2, 2020
Those who say are proud to be his fans, please make him proud of you! Please do not indulge in such cheap activities.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com