வெற்றி பெற்றவர் கூட தற்கொலையா? லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் தற்கொலை குறித்து பிரபல நடிகை!
- IndiaGlitz, [Wednesday,December 25 2019]
லக்ஷ்மன் ஸ்ருதி இசை குழுவின் ராமன் அவர்கள் நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இசை ரசிகர்களுக்கு இன்னிசையை தந்து கொண்டிருந்த ராமன் அவர்களின் மறைவு இசை ரசிகர்களுக்கும் அந்த இசை குழுவுக்கும் ஒரு பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ராமன் அவர்களின் மறைவு குறித்து எஸ்பி பாலசுப்பிரமணியன், விவேக் உள்பட பல திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரபல நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் அவர்கள் தற்கொலையா? அளவு கடந்த அதிர்ச்சியும் துக்கமும் தொண்டையை அடைக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க வார்த்தையே இல்லை. சமூகத்தில் சிறந்தவர்கள், வெற்றியாளர்கள் கூட தற்கொலையை நாடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
LaxmanSruthi ராமன் அவர்கள் தற்கொலையா ? அளவுகடந்த அதிர்ச்சியும் துக்கமும் தொண்டையை அடைக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க வார்த்தையே இல்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) December 25, 2019
சமூகத்தில் சிறந்தவர்கள், வெற்றியாளர்கள் கூட தற்கொலையை நாடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.