கொரோனா வைரஸ் பீதி: கஸ்தூரி படப்பிடிப்பில் பரபரப்பு 

நடிகை கஸ்தூரி நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ஐடி நிறுவனம் திடீரென கொரொனா வைரஸ் பீதி காரணமாக மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகை கஸ்தூரி தற்போது தெலுங்கு தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஐடி பார்க் அருகே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கஸ்தூரி சமீபத்தில் இந்த தொடரின் படப்பிடிப்புக்கு சென்றபோது படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள ஐடி பார்க் திடீரென மூடப்பட்டது

அந்த ஐடி பார்க்கில் பணிபுரியும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து ஒட்டுமொத்த ஐடி பார்க்கும் மூடப்பட்டதால் படப்பிடிப்பு குழுவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டதாக கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் வைரஸ் பாதிப்பு உள்ள இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது என்பது தெரிந்ததே

மேலும் நாளை வெளியாக உள்ள வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’ என்ற திரைப்படத்தில் கஸ்தூரி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் விஜய் ஆண்டனியின் ’தமிழரசன்’ படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது