சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும்: கஸ்தூரி அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களாக அரசியல் தலைவர் ஒருவர் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சை கருத்தும், சபரிமலையில் பெண்கள் செல்லும் வழக்கின் தீர்ப்பும் டிரெண்ட் ஆகி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த இரண்டு விஷயங்கள் குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
குழந்தையின் கிறுக்கல்களை கூட பார்த்து, கண்விரித்து கைதட்டி கலையென்று மகிழ்வதுதான் மனித இயல்பு. பிடித்து வைத்த மஞ்சளிலும் பிள்ளையாரை பார்ப்பது நம்பிக்கை. கோவில் சிலையில் கலைநயத்தை உணர நம்பிக்கை தேவையில்லை, கண்பார்வை இருந்தால் போதும். கம்யூனிஸ்ட் நாத்திக சீன அதிபருக்கு கூட ரசிக்க தெரிந்தது, இங்கு வன்மம் புடிச்ச சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை.
சபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று அடம் பிடிக்கும் பெண்களை எடுத்துக்கொண்டால்... தீவிர பக்தைகளா என்றால் அதுதான் இல்லை. தீவிர விவாதிகள் , பகுத்தறிவு வாதிகள், பெண் உரிமை பெரும் போராளிகள். சபரிமலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை , பாவம் ஐயப்பன் தான் எந்த உரிமையும் கேட்டு போராடாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார்!
புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு?சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்படவேண்டும்- அது அவரின் பிறப்பினால அல்ல , அவரின் பிறவிக்குணத்தால்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout