வருவாருன்னு நினைக்கல, வந்தா நல்லாயிருக்கும்ன்னு நினைகிறேன்: ரஜினி அரசியல் குறித்து பிக்பாஸ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த் அரசியல் வருவாரா? மாட்டாரா? என்பதை கமல் பாணியில் கருத்து சொன்ன பிக்பாஸ் நடிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்த வாத, விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பல செய்தி சேனல்கள் இதுகுறித்து விவாதத்தை நடத்தி வருகின்றன என்பதும் பெரும்பாலானோர் ரஜினிகாந்த் அரசியலுகு வரமாட்டார் என்றே கருத்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் பதிவு செய்த டுவிட்டில் இருந்து அவர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று அவரது ரசிகர்களே சோகமாக பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் ஒருசிலரோ வரும் பிப்ரவரி மாதம் திடீரென ரஜினியின் அரசியல் அறிவிப்பு வரும் என இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பதை தசாவதாரம் கமல் பாணியில் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். ’ரஜினிகாந்த் வருவாருன்னு நினைக்கல, வந்தா நல்லாயிருக்கும்ன்னு நினைகிறேன்’ என்று பதிவு செய்திருக்கும் கஸ்தூரியின் டுவிட் தற்போது வைரலாகி வருகிறது
Rajini paththi Kamal style la solren.
— Kasturi Shankar (@KasthuriShankar) October 30, 2020
Varuvaarunnu ninaikkale. Vantha nalla irukkumnu ninaikkiren. #RajinikanthPoliticalEntry https://t.co/JEYDCGYPNL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments