இப்ப இல்லை, எப்பவுமே இல்லை: ரஜினிகாந்த் அறிக்கை குறித்து தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Tuesday,December 29 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி வரும் தேர்தலில் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சற்றுமுன் தான் அரசியல் கட்சி தொடங்கபோவதில்லை என்றும், ரஜினி மக்கள் மன்றம் எப்போதும் போல் செயல்படும் என்றும், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இந்த முடிவுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்

ரஜினியின் அரசியல் முடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது, ‘எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே இப்ப இல்லை, எப்பவுமே இல்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.,

More News

'மாஸ்டர்' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி: ரசிகர்கள் மகிழ்ச்சி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் மாஸ் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும்

என்னால தான் எல்லாம்: பாலாஜியை கண்கலங்க வைத்த ஷிவானி தாயார் வருகை!

இன்று பிக்பாஸ் வீட்டிற்கு ஷிவானியின் தாயார் வருகை குறித்த காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது என்பதையும் 'இங்கே வந்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ செய்வது எதுவும் வெளியே தெரியாது

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை: ரசிகர்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் வரும் 31-ஆம் தேதி அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்

கொரோனாவில் இருந்து குணமான சூர்யா-கார்த்தி பட நடிகை!

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை ஒருவர் தான் குணம் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

விஜய் வைத்த கோரிக்கை என்ன? தமிழக முதல்வர் விளக்கம்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வரை தளபதி விஜய் சந்தித்தார்