close
Choose your channels

ஆளாளுக்கு ஒருவிதமா பேசுறாங்களே! ரஜினி-பெரியார் விவகாரம் குறித்து கஸ்தூரி

Friday, January 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரியார் குறித்து அவமரியாதையாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக ஒரு சில அதிமுக அமைச்சர்கள் ரஜினிக்கு ஆதரவாகவும் பேசத் தொடங்கிவிட்டனர். ஒரே கட்சியில் இருக்கும் அமைச்சர்கள் ரஜினிக்கு எதிர்ப்பாகவும் ஆதரவாகவும் பேசி வருவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்து வருவதாக நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

ஒரே நாளுலே ஒரே கட்சிக்காரங்க ஆளுக்கொரு விதமா பேசினா பாவம் மக்கள் எதைன்னு எடுத்துக்கறது? என்கினாச்சும் சொகுசு ரிஸார்ட்டுக்கு போயி கூடி ஒரு முடிவு எடுத்து வரலாமில்லை? அவங்க சொந்த மீடியாவே குழம்பறாங்க !

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பெரியாரை விமர்சித்த ரஜினியை திமுகக்காரர்கள் தாக்காமல் நாசூக்காக வலிக்காமல் கருத்து சொல்கிறார்கள். திரு ஜெயக்குமார், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள்தான் அதிகமாக எதிர்க்கிறார்கள். அதிலும் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் சௌந்தர்யாவையும் அவரது கணவர் விசாகனையும் பற்றி பேச அவசியம் என்ன ?

கொஞ்சம் யோசித்து பார்த்தால் இதிலுள்ள அரசியல் புரிகிறது. பெரியாரை புகழ்ந்த மாதிரியும் ஆயிற்று, ரஜினியை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று, திமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த விசாகன் பெயரை இழுத்ததன் மூலம் திமுகவை தர்மசங்கப்படுத்திய மாதிரியும் ஆயிற்று. பாவம் திமுக , ரஜினி 168 , சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் புண்ணியத்தில் ஏற்கனவே திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் தான் உள்ளனர்.

கடந்த எத்தனையோ வருடங்களாக அதிமுக வை யாரும் பெரியாருடன் இணைத்து பார்த்ததில்லை. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையம் கொள்கைகளும் பெரியாரிய அரசியலும் எதிர் எதிர் துருவங்கள். மேலாக, பிஜேபி யும் அதிமுகவும் தோழமை கட்சிகள் என்னும் போது அம்மா வழி வந்த அமைச்சர்கள் , இன்று இப்படி பேசுவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? ஒரு வேளை ரஜினி வந்துவிட்டால் அதிமுக வை பிஜேபி இரண்டாம் பட்சமாக நடத்தும் என்ற சந்தேகமோ?

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment