நாங்க எல்லாம் அப்பவே சொல்லிட்டோம்: பிரதமரின் விளக்கேற்றுவது நடிகை கஸ்தூரி 

  • IndiaGlitz, [Friday,April 03 2020]

பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது வரும் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் மெழுகுவர்த்தி போன்றவற்றை ஏற்றி நமது தேசத்தின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த கருத்து குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி பிரதமரின் இந்த கருத்தை நாங்கள் எப்போதோ கூறி விட்டோம் என்று கூறி கஸ்தூரி நடித்த ’ஆத்மா’ படத்தில் இடம்பெற்ற ’விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்’ என்ற பாடலின் யூடியூப் லிங்க்கை பதிவு செய்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த பதிவு தற்போது நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.