மொத்த காண்டையும் இறக்கிட்டாப்ல: கமலின் 'பத்தல பத்தல' பாட்டை விமர்சனம் செய்த கஸ்தூரி

  • IndiaGlitz, [Thursday,May 12 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தின் ’பத்தல பத்தல’ என்ற பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலை நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று வெளியான ’பத்தல பத்தல’ பாடலில்

கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..

என்ற வரிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே... என்ற வரி மத்திய அரசை மறைமுகமாக விமர்சிப்பதாக கூறப்பட்டட்து.

ஒன்றியம் என மத்திய அரசை ஒரு சில அரசியல்வாதிகள் கூறிவரும் நிலையில் மத்திய அரசை தான் கமல்ஹாசன் இவ்வாறு விமர்சனம் செய்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஒருசில ஆதரவு கருத்துக்களும் பல எதிர்ப்பு கருத்துக்களும் பதிவாகி வருகிறது.