படுத்தே விட்டானய்யா... கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்த நடிகை கஸ்தூரி.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை மழை, பெருவெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசனை நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் தத்தளித்து வருகின்றனர். இன்னும் கூட சில பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மின்சாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் இது குறித்து கருத்து கூறிய போது, ’"மக்களுக்கு என்ன செய்வது என்பது தான் தற்போதைய பணி.. அரசை குறை கூறுவது அல்ல. அரசு இயந்திரம் என்பது ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுனர்களுடன் இணைந்து திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி பதில் கூறியபோது, ’That படுத்தே விட்டானய்யா moment’. ‘மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமையில்லையா? யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரசாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments