கமல் கட்சியில் இருந்து விலகியவர்கள் என்ன செய்வார்கள்? கஸ்தூரி கூறிய ஆருடம்!
- IndiaGlitz, [Thursday,May 20 2021]
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அக்கட்சியிலிருந்து அடுத்தடுத்து பிரமுகர்கள் விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன், அதன் பின்னர் சந்தோஷ் பாபு, பத்மபிரியா உள்பட ஒரு சிலர் விலகினார். நேற்று முருகானந்தமும் இன்று குமரவேலும் அக்கட்சியில் இருந்து விலகி இருப்பதை அடுத்து கமல் கட்சியின் கூடாரமே காலியாவது போல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
மேலும் கமல் கட்சியிலிருந்து விலகிய அனைவருமே கமல் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பதும் கமல் ஒரு சர்வாதிகார போக்கில் கட்சியை நடத்தி வருகிறார் என்றும் கமல்ஹாசன் கட்சி அரசியல் கட்சி அல்ல என்றும் அது ஒரு கம்பெனி என்றும் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் கமல் கட்சியிலிருந்து அடுத்தடுத்து பிரமுகர்கள் விலகி வருவது குறித்து அவ்வப்போது தனது டுவிட்டரில் கருத்து கூறி வரும் நடிகை கஸ்தூரி இன்று குமரவேல் விலகியது குறித்தும் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கமல் கட்சியில் இருந்து அடுத்த விக்கெட் விழுந்துள்ளது,. மக்கள் நீதி மய்யத்தில் இருந்து குமரவேல் விலகியுள்ளார். கமலின் அணுகுமுறையை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனது யூகம் என்னவெனில் கமல் கட்சியில் இருந்து விலகும் அனைவரும் திமுகவில் இணைந்து விடுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார். கஸ்தூரி கூறியபடி டாக்டர் மகேந்திரன் விரைவில் திமுகவில் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன