ஆம்பள ஆம்பள என ஊளையிடுவதை தட்டி கொடுப்பதா? கஸ்தூரி கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் இந்த நிகழ்ச்சியின் சில முக்கிய வீடியோக்களை அவ்வபோது விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றது. இதில் சில காட்சிகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாத காட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் டிவி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கவின், சாண்டி, தர்ஷன், முகின் ஆகிய நால்வரும் ‘வி ஆர் த பாய்ஸ்’ என்ற பாடலை பாடிக்கொண்டிருக்கும் காட்சி உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகையும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த வீடியோ ஒரு மோசமான ரசிப்புத்தன்மை கொண்டது. . நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? நம் இளைஞர்கள் சிறப்பானவர்களாக வரவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் நெட்டிசன்களின் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவு செய்யப்பட்டு வருகிறது.
In very very bad taste. In promoting its favorites, @vijaytelevision has ended up promoting toxic fake masculinity. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? You owe it our youngsters to set better standards. #BiggBossTamil @ikamalhaasan https://t.co/UmLZv41wqA
— Kasturi Shankar (@KasthuriShankar) October 14, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments