அஜித், ஷாலினிக்கு கஸ்தூரி விடுத்த வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் சமூக வலைத்தளமாக பயனாளிகளுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே டுவிட்டர் இணையதளத்தில் கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இதில் ஆபாசமான வார்த்தைகளால் சமூக வலைத்தள பயனாளிகள் கஸ்தூரியை திட்ட, அதற்கு கஸ்தூரியும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் இது குறித்து தற்போது மேலும் அவர் பதிவு செய்துள்ள ஒரு டுவிட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் பிரச்சினையில் எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அதேபோல் பெண்களை மதிக்கத் தெரிந்த அனைவருக்கும் எனது நன்றி.
இந்த விஷயத்தில் அஜித் குமார் மற்றும் ஷாலினி அவர்கள் தலையிட்டு ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேட்டுக்கொண்டிருந்தார். கஸ்தூரியின் இந்த வேண்டுகோளை அஜித் மற்றும் ஷாலினி ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் என்ற போர்வையில் ஒளிந்து, ஆபாசமான பதிவுகளை செய்து வருபவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Support messages have been pouring in from all quarters all day all night yesterday. Heartfelt thanks to all those who have stood by me and stood up for the dignity of women. I urge respected Mr AjithKumar and Mrs Shalini to condemn such despicable online abuse .
— Kasturi Shankar (@KasthuriShankar) January 20, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com