ஒரு உயிருக்கு ஒரு மணி நேரம் செலவழிக்க முடியாதா? கமலுக்கு நடிகை கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ‘இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்துவரும் போலீசார் நேற்று கமலஹாசனை சுமார் 3 மணி நேரம் விசாரணை செய்தனர். இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் நீதி மையம் கட்சி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இந்த கண்டனம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய நடிகை கஸ்தூரி இந்தியன் படப்பிடிப்பின்போது மூன்று உயிர்கள் இழந்துள்ள நிலையில் ஒரு உயிருக்கு ஒரு மணி நேரம் என்ற வகையில் மூன்று மணி நேரம் விசாரணைக்கு வருவதில் கமலுக்கு என்ன பிரச்சனை? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல்? என்ற கேள்வி வரும்’ என்று கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார். வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த பதிவிற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.
3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல் என்ற கேள்வி வரும். https://t.co/QUTuGUdPew
— Kasturi Shankar (@KasthuriShankar) March 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments