கண்ணாடி அதன் முன்னாடி: கஸ்தூரியின் லேட்டஸ்ட் செல்பி!

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் திரைப்பட செய்திகள் மட்டுமின்றி சமூக அரசியல் கருத்துக்களையும் அவர் தைரியமாக முன் வைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனக்கு எதிராக பதிவு செய்யப்படும் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் தைரியமாக அவர் தனது கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்துக் கொண்டிருப்பதால் அவரது சமூக வலைத்தளத்தில் ஃபாலோயர்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் கஸ்தூரி சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை கஸ்தூரி தற்போது ’தமிழரசன்’ ’உன் காதல் இருந்தால்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.