என் வாய்தான் என் எதிரி: லதா விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி

  • IndiaGlitz, [Friday,April 12 2019]

எம்ஜிஆர்-லதா குறித்து நடிகை கஸ்தூரி பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது என்பது தெரிந்ததே. அவருடைய டுவீட்டுக்கு லதாவும் நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அந்த டுவீட்டை டெலிட் செய்த கஸ்தூரி, லதாவிடம் வருத்தமும் தெரிவித்தார். இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இதுகுறித்து ஊடகம் ஒன்றில் அவர் பேட்டியளித்துள்ளார்.

மனதில் பட்டதை சொல்லிவிடுவேன். என் வாய்தான் என் எதிரி. அதனால சிலநேரம் நல்லதும் நடக்கும்; கெட்டதும் நடக்கும் என்று கூறிய கஸ்தூரி அந்த டுவீட் குறித்து கூறியபோது, '''பத்து ஓவர்ல மேட்ச்சை முடிச்சிடுவாங்கனு நினைச்சேன். ரொம்ப நிதானமா ஆடிக்கிட்டு இருந்தாங்க. அதை என் ஸ்டைல்ல கொஞ்சம் காமெடியா கமென்ட் பண்றதுக்காக எனக்குப் பிடிச்ச நாயகன், நாயகி நடித்த ஒரு காட்சியை ஒப்பிட்டு எழுதினேன். எம்.ஜி.ஆர் பெயரைப் பார்த்தாலே தமிழ்நாட்டில் பலரும் பொங்கிடுவாங்களே... அதான் நடந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் நான் எம்.ஜி.ஆரைப் பற்றி தப்பா எழுதல; ரசிச்சுத்தான் எழுதியிருக்கேன். என் விளக்கத்தைப் படிச்சா அது புரியும். மத்தபடி, நடிகை லதா உள்பட பலரும் எடுக்கச் சொன்னதுனாலதான், அந்த ட்விட்டை டெலிட் பண்ணேன் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

More News

சூர்யா, கார்த்தியை சந்தித்த டி.ராஜேந்தர்

பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களாக தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக பிரலங்களை சந்தித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

கொஞ்சம் சரி, கொஞ்சம் தவறு: பத்திரிகை செய்தி குறித்து நடிகர் விவேக் விளக்கம்

முன்னணி தமிழ் ஊடகம் ஒன்றில் நடிகர் விவேக், தினகரனின் அமமுகவுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த செய்தியை குறிப்பிட்டுள்ள நடிகர் விவேக்

என் ஓட்டு அவருக்குத்தான்: ஸ்ருதிஹாசனின் டுவீட்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் மக்களவை தேர்தலில் ஒருசில சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து 40 மக்களவை தொகுதிகளிலும்,

டிவி ரிமோட்டை உடைத்து ஆத்திரமான கமல்ஹாசன்: அதிர்ச்சி வீடியோ

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு கேட்டு கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றி ஹீரோவான பாட்டி!

சென்னைக்கு அருகேயுள்ள பூந்தமல்லியில் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை அந்த குழந்தையின் பாட்டி தனது உயிரையும் மதிக்காமல் கிணற்றில் குதித்து காப்பாற்றிய சம்பவம்