தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கிறாரா கஸ்தூரி? தனிப்படை போலீசார் விரைவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக சந்தேகப்படும் நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்ய ஹைதராபாத் விரைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகை கஸ்தூரி இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக அவர் பேசியதாக கூறப்பட்டது.
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணை செய்ய போலீசார் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது அவர் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக இருக்கும் நிலையில், அவரது முன்ஜாமீன் மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசார் சந்தேகம் அடைந்திருப்பதாகவும், இதனை அடுத்து தனிப்படை போலீசார் ஹைதராபாத் சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போலீசாரின் தீவிர நடவடிக்கை பார்க்கும் போது, இன்னும் ஒரு சில நாட்களில் அவர் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout