டாஸ்மாக்கில் மது வாங்கும் இளம்பெண்கள்.. நடிகை கஸ்தூரியின் கமெண்ட்டுக்கு குவியும் கண்டனங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
டாஸ்மாக் மதுக்கடையில் இரண்டு இளம் பெண்கள் மது வாங்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகை கஸ்தூரிக்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்
நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு இளம் பெண்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் வீடியோவை வெளியிட்டு அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக அவர் கூறியிருப்பதாவது:
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதற்கு விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது: தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண், இளைப்பில்லை காணென்று தண்ணியடி. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும்.
நடிகை கஸ்தூரியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சில பெண்கள் மது வாங்கியதை அடுத்து மகளிர் உரிமை தொகை வாங்கும் பெண்கள் அனைவரும் டாஸ்மாக் செல்வது போல் கூறுவதா? என்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளதாவது: தவறான பாதையில் போகும் சில பெண்களை பற்றியே பதிவு. அவர்களின் பணம் பற்றியே கூறியுள்ளேன். மதுக்கடையில் பெண்கள் நிற்கும் நிலையை கண்டிக்க மாட்டீர்கள். அது யாருக்கென்றாலும். பெண்கள் உரிமை பணம் ஆண்களின் தவறான செலவுகளுக்கு பலியாகக்கூடாது .
தண்ணியடி, பெண்ணே தண்ணியடி !
— Kasturi (@KasthuriShankar) July 13, 2023
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று தண்ணியடி.
WhatsApp fwd of the day. As received.
Super. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும் 🫤#dravidamodel pic.twitter.com/7SA889fwpp
It was not a sweeping general statement. தவறான பாதையில் போகும் சில பெண்களை பற்றியே பதிவு. அவர்களின் பணம் பற்றியே கூறியுள்ளேன். மதுக்கடையில் பெண்கள் நிற்கும் நிலையை கண்டிக்க மாட்டீர்கள். அது யாருக்கென்றாலும்.
— Kasturi (@KasthuriShankar) July 13, 2023
பெண்கள் உரிமை பணம் ஆண்களின் தவறான செலவுகளுக்கு பலியாகக்கூடாது . https://t.co/ytKP3QLTRR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments