அஜித் ரசிகர்கள் மீது பி.ஆர்.ஓவிடம் புகார் கூறிய கஸ்தூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதும் அதற்கு நெட்டிசன்களிடம் இருந்து விமர்சனம் பெறுவதும் வழக்கமான ஒன்றே.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்களுடன் நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளம் மூலம் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அஜித் ரசிகர் என்ற போர்வையில் ஒரு நெட்டிசன் கஸ்தூரி குறித்து ஆபாசமான கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். இதற்கு கஸ்தூரி 'மானம் ரோஷமுள்ள அஜித் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்த கூமுட்டையின் விவரம் அறிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்' என்று பதிவு செய்து அதனை அஜித்தின் பி.ஆர்.ஓவுக்கும் டேக் செய்துள்ளார்.
ஆனால் இதே பதிவின் கமெண்ட் பதிவில் ஆபாசமாக பதிவு செய்த அந்த நபரே தன்னுடைய மொபைல் எண்ணண பதிவு செய்து 'இதுதான் என்னோட நம்பர்' என்று பதிவு செய்துள்ளார். அதற்கு நன்றி என்று கூறியுள்ள கஸ்தூரி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மானம் ரோஷமுள்ள அஜித் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள்.இந்த கூமுட்டையின் விவரம் அறிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். @SureshChandraa , Please escalate this matter. #dirtyAjithFans pic.twitter.com/aBjQlKaw7C
— Kasturi Shankar (@KasthuriShankar) December 28, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments