அண்டை மாநிலத்தின் வெற்றியும் தமிழகத்தின் சுய விளம்பரமும்: கஸ்தூரி ஆவேச டுவீட்

இந்தியாவில் முதல் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமான கேரளா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்தது. ஆனால் அம்மாநிலத்தின் முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது கேரளா கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா இல்லாத மாநிலமாக கேரளா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக எடுத்துவந்த போதிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இதிலும் அரசியல் செய்து வருகின்றனர். அரசின் நடவடிக்கைகளை குறைசொல்லி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதும், எதிர்க்கட்சிகளை அரவணைக்காமல் அரசு தனியாக நடவடிக்கை எடுப்பதும் விமர்சனத்திற்கு உரியதாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் - 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி,0 விளம்பரம். அதிகம் பேசவில்லை பினரயி விஜயன். அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு’ என்று பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் இந்த டுவிட்டுக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன,

More News

ராகவா லாரன்ஸின் அடுத்த ரூ.25 லட்சம் நிதியுதவி: 

கொரோனா வைரஸ் காரணமாக முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும்

கொரோனா நோய்க்கான எதிர்ப்பு ஆற்றல் இந்தியர்களுக்கு இயல்பிலேயே இருக்கிறது!!! மூத்த விஞ்ஞானி தகவல்!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கொசுத் தடுப்பு மையத்தின் மூத்த விஞ்ஞானியும் சுகாதாரத்துறை ஆலோசகருமான மாரியப்பன் கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பு ஆற்றல்

வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி? பிரபல நடிகையின் ரெசிப்பி வீடியோ

கொரோனா விடுமுறையில் நடிகர் நடிகைகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும், பல நடிகைகள் வித்தியாசமான தங்களுடைய அனுபவங்களையும்,

கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர்!!!

தமிழத்தில் நேற்றைய நிலவரப்படி 1,267 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது.

ஜெனிபர் லோபஸ் பாடலுக்கு நடனம் ஆடிய தமிழ் நடிகை

ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருப்பதால் பிரபல நடிகர், நடிகைகள் முதல் திரைத்துறையினர் அனைவரும் தங்களது சமூக வளைதளத்தில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு