அவசரப்பட்டுட்டேன், என் கணிப்பு தப்பவில்லை: நடிகை கஸ்தூரி
- IndiaGlitz, [Tuesday,May 05 2020]
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்துள்ள நிலையில் நேற்று முதல் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் இதுகுறித்த அறிவிப்பு நேற்று மாலை வரை இல்லை. இதனை கருத்தில் கொண்டு நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி என்றும், நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன் என்றும், என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் கஸ்தூரி டுவிட் செய்த சில மணி நேரத்தில் தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து நடிகை கஸ்தூரி தற்போது, ‘அவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே. குடிக்கு அடிமையான தமிழக அரசை பற்றி என் கணக்கு சரி. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள்? குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இன்னொரு டுவீட்டில், ‘இதற்கு கேவலமான சப்பைக்கட்டுக்கள் வேறு. இதை நான் எதிர்பார்த்ததுதான், நேற்று ஏமாந்துவிட்டேன். ஏமாந்து விட்டோம் என்று கூறியதோடு தமிழக அரசை மன்றாடி கேட்டு கொள்கிறேன். கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தபோது மூடிவிட்டு இப்பொழுது அதிகமாகும் பொழுது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகிவிடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பிவைக்கவேண்டாம் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே. குடிக்கு அடிமையான தமிழக அரசை பற்றி என் கணக்கு சரி. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள்? குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள். pic.twitter.com/duAI9qAmIn
— Kasturi Shankar (@KasthuriShankar) May 4, 2020