அஜித் சார், எவ்வளவு நாளைக்குத்தான் சும்மா இருப்பீங்க? கஸ்தூரி கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் என்பதும், அவ்வப்போது சமூக கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்துபவர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. கஸ்தூரியுடன் மோதுவது உண்மையிலேயே அஜித் ரசிகர்களா? அல்லது அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் இருக்கும் மற்றவர்களா? என்பதும் கேள்விக்குறியே.
இந்த நிலையில் நேற்று கஸ்தூரி பதிவு செய்த ஒரு டுவிட்டுக்கு அஜித் ரசிகர்கள் என்று கூறப்படும் ஒருசிலர் ஆபாசமான சில கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இவர்கள் இலங்கை தமிழர்கள் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி, அஜித்துக்கும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுமாதிரி மோசமாக பதிவு செய்து வருபவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அஜித் மற்றும் சுரேஷ் சந்திரா ஆகியோர் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சும்மா இருப்பிங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவளால என்ன பண்ண முடியும் , கதறுவதை தவிர என்ற திமிர் எங்கேயிருந்து வந்தது? உங்கள் மௌனத்தில் இருந்து வந்தது. தமிழக காவல்துறை இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஸ்தூரி பதிவு செய்துள்ளார்.
மேலும் தன்னை அவமரியாதை பதிவு செய்தவரை கண்டுபிடிக்க ஈழத்தில் உள்ளவர்கள் தனக்கு உதவ வேண்டும் என்றும் அவர் ஈழத்தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Come on guys, you have to act. Do the people at twitter actually endorse such harassment? @TwitterIndia
— Kasturi Shankar (@KasthuriShankar) March 10, 2020
And @SureshChandraa , Ajith Sir, Evvalavu naalaikku summaa irupeenga ? #ShameOnYou #DirtyAjithFans #vicious pic.twitter.com/BZW0uoNQ2y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout