இரும்பு பெண்மணியே, உங்கள் ரகசியம் என்ன? குஷ்புவிடம் கஸ்தூரி கேட்ட கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பாஜக கட்சி பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இதனால் தனக்கு கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அடிக்கடி தான் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதாகவும் தற்போது மூன்றாவது முறையாக முன்னெச்சரிக்கை காரணமாக பரிசோதனை செய்து கொண்டதாகவும் நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
இந்த முறையும் தனக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரில்சட் தான் வந்திருக்கிறது என்றும் அனைவரின் ஆசிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்
இந்த நிலையில் இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த நடிகை கஸ்தூரி, ‘இரும்பு பெண்மணி உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம் என்ன? அதனை கொஞ்சம் பகிருங்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்
நடிகை கஸ்தூரியின் இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் வழக்கம்போல் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்
iron lady . Please share your immunity secret !
— Kasturi Shankar (@KasthuriShankar) October 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com