வைரமுத்து வளர்ச்சி இளையராஜாவுக்கு பிடிக்கவில்லையா? கஸ்தூரிக்கு பதில் அளித்த சீனுராமசாமி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா மற்றும் கவியரசு வைரமுத்து ஆகிய இருவரது பிரச்சனை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி வரும் நிலையில் இது குறித்து சீனுராமசாமி கூறிய ஒரு கருத்துக்கு கஸ்தூரி பதில் அளித்த நிலையில் சீனுராமசாமி மீண்டும் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அது குறித்து தற்போது பார்ப்போம்.
இளையராஜா - வைரமுத்து விவகாரம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் ‘’உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான் வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய Dummy lyrics ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள்’ என்று கூறியிருந்தார்.
இதற்கு நடிகை கஸ்தூரி, ‘திரு வைரமுத்துவுக்கு முன்னும் பின்னும் இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்களுக்கு பாட்டெழுதி ஹிட்டடித்த பெரும் திறமைசாலிகளை எதற்கு குறைத்து பேச வேண்டும்? சீனுராமசாமியின் இந்த பதிவு மிகவும் வருத்ததுக்குரியது . தேவையற்றது’ என்று பதிவு செய்திருந்தார்
கஸ்தூரியின் இந்த ட்விட்டுக்கு பதில் அளித்த சீனுராமசாமி, கவிஞர்கள் கவிதை வரிகளை எழுதி பாட்டில் பேர் வாங்கி விடக்கூடாதுன்னு கவனமா இருப்பாரு அதுக்கு காரணம் வைரமுத்து வளர்ச்சி அண்ணாவுக்கு பிடிக்கல கண்ணா" என்று நான் இயக்கி வரும் கோழிப் பண்ணை செல்லதுரை படத்தில் பாடல் எழுத வரும் போது #DummyLyric விசயத்தை சொன்னது திரு கங்கை அமரன் அவர்கள்’ என்று கூறியிருந்தார். மேலும் அடுத்த படம் ராஜா சாருடன் இணைந்து ஒரு படம் இயக்கவும் காத்திருக்கேன். அவர் மேனேஜர் ஸ்ரீராம் சார் கூட பேசிஇருக்கேன் சகோதரி என்றும் தெரிவித்துள்ளார்.
"கவிஞர்கள் கவிதை வரிகளை எழுதி பாட்டில் பேர் வாங்கி விடக்கூடாதுன்னு கவனமா இருப்பாரு அதுக்கு காரணம் வைரமுத்து வளர்ச்சிஅண்ணாவுக்கு பிடிக்கல கண்ணா"என்று நான் இயக்கி வரும் கோழிப் பண்ணை செல்லதுரை படத்தில் பாடல் எழுத வரும் போது #DummyLyric விசயத்தை சொன்னது திரு கங்கை அமரன் அவர்கள் 🙏🏽🙏🏽 https://t.co/MwNGvmTjRU
— Seenu Ramasamy (@seenuramasamy) May 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments