வைரமுத்து வளர்ச்சி இளையராஜாவுக்கு பிடிக்கவில்லையா? கஸ்தூரிக்கு பதில் அளித்த சீனுராமசாமி..!

  • IndiaGlitz, [Sunday,May 05 2024]

இசைஞானி இளையராஜா மற்றும் கவியரசு வைரமுத்து ஆகிய இருவரது பிரச்சனை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி வரும் நிலையில் இது குறித்து சீனுராமசாமி கூறிய ஒரு கருத்துக்கு கஸ்தூரி பதில் அளித்த நிலையில் சீனுராமசாமி மீண்டும் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அது குறித்து தற்போது பார்ப்போம்.

இளையராஜா - வைரமுத்து விவகாரம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் ‘’உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான் வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய Dummy lyrics ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு நடிகை கஸ்தூரி, ‘திரு வைரமுத்துவுக்கு முன்னும் பின்னும் இசைஞானி இளையராஜாவின் மெட்டுக்களுக்கு பாட்டெழுதி ஹிட்டடித்த பெரும் திறமைசாலிகளை எதற்கு குறைத்து பேச வேண்டும்? சீனுராமசாமியின் இந்த பதிவு மிகவும் வருத்ததுக்குரியது . தேவையற்றது’ என்று பதிவு செய்திருந்தார்

கஸ்தூரியின் இந்த ட்விட்டுக்கு பதில் அளித்த சீனுராமசாமி, கவிஞர்கள் கவிதை வரிகளை எழுதி பாட்டில் பேர் வாங்கி விடக்கூடாதுன்னு கவனமா இருப்பாரு அதுக்கு காரணம் வைரமுத்து வளர்ச்சி அண்ணாவுக்கு பிடிக்கல கண்ணா என்று நான் இயக்கி வரும் கோழிப் பண்ணை செல்லதுரை படத்தில் பாடல் எழுத வரும் போது #DummyLyric விசயத்தை சொன்னது திரு கங்கை அமரன் அவர்கள்’ என்று கூறியிருந்தார். மேலும் அடுத்த படம் ராஜா சாருடன் இணைந்து ஒரு படம் இயக்கவும் காத்திருக்கேன். அவர் மேனேஜர் ஸ்ரீராம் சார் கூட பேசிஇருக்கேன் சகோதரி என்றும் தெரிவித்துள்ளார்.

More News

ஆயிரக்கணக்கான பேருக்கு அசால்டாக சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.

மெஹந்தி சர்க்க்ஸ் என்ற நாடகத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜன்.ஒரு சிறந்த சமையல்காரராக பிரபலம் அடைந்தார்.இன்று பல இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்..

விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த கனகா.

பிறகு நான் கனகாவின் அம்மா தேவிகாவிடம் பேசினேன். அதற்கு அவர்கள் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் என் மகள் நிச்சயமாக நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டார்...

விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த கனகா.

பிறகு நான் கனகாவின் அம்மா தேவிகாவிடம் பேசினேன். அதற்கு அவர்கள் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் என் மகள் நிச்சயமாக நடிக்க மாட்டார்..

நடிகர் ராமராஜன் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாராத துக்கம்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு இணையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த ராமராஜன் வீட்டில் திடீரென ஏற்பட்ட துக்கம் காரணமாக திரையுலகினர் அவருக்கு

'அரண்மனை 5' உருவாக வேண்டும் என்றால் இது நடக்க வேண்டும்: சுந்தர் சி

சுந்தர் சி இயக்கி நடித்த 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்றும் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் பார்க்க ஒரு நல்ல கலகலப்பான