ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? அமெரிக்க பயணம் குறித்து கஸ்தூரி கேள்வி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தனி விமானத்தில் சென்ற நிலையில், இதுகுறித்து நடிகை கஸ்தூரி அடுக்கடுக்காக தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

மே மாதம் முதல் அனைத்து இந்தியர்களும் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகளும் வழங்கப்படவில்லை. பின்னர் எப்படி, அமெரிக்காவுக்கு ரஜினிகாந்த் பயணம் சென்றார்? அவர் அரசியலில் இருந்து திடீரென விலகியதும், இப்போது அமெரிக்கா செல்வதும் சரியாகப் படவில்லை. ரஜினி அவர்கள் இதனை தயவு செய்து தெளிவுபடுத்த வேண்டும்.

நான் இவ்வாறு கேள்வி கேட்பதில் காரணம் உள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அமெரிக்கா திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு இருக்கும்போது ரஜினி பயணம் ஒரு மர்மமாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்று ரஜினி அமெரிக்கா சென்றார் என்றார் அவரது உடல்நிலைக்கு அப்படி என்ன என்பதும் கவலை அளிக்கிறது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல் நிலையில் என்ன பாதிப்பு என்ன? என்ற கேள்வியை நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ளார்.
 

More News

குழந்தைகளுக்கு கோவிட், CT ஸ்கேன் எடுக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கொரோனா பரவலின் மூன்றாவது அலை அதிகளவில் குழந்தைகளைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்

'பாபநாசம் 2' படத்தில் கமல் ஜோடியாக இந்த நடிகையா? அப்ப மீனா இல்லையா?

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமான 'பாபநாசம்' திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே.

எதையும் ஒளித்து வைக்க முடியாது… நடிகை அமலா பாலின் செம குத்து டான்ஸ் வைரல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது வெப் சீரிஸிலும் களம் இறங்கி இருக்கிறார்.

ஷங்கர் மகளுக்கு முதல்வர் கொடுத்த திருமண பரிசு என்ன தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்தது.

ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்....! உறுதியளித்த முதல்வர் முக.ஸ்டாலின்.....!

அண்மையில் முதல்வரை சந்திந்த பத்திரிக்கையாளர்களிடம், "ஊடக சுதந்திரம் தமிழகத்தில் பாதுகாக்கப்படும்" என ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்தார்.