அர்த்தராத்திரியில் குடை பிடித்தால் ஆரோக்யம்: பிரபல நடிகையின் டுவீட்
- IndiaGlitz, [Wednesday,April 29 2020]
சமீபத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும் என சமீபத்தில் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் ‘அர்த்தராத்திரியில் குடைபிடித்தால் அற்பமில்லை, ஆரோக்யம் தான்’ என்று கூறியுள்ளார்.
கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து மக்கள் தப்பிக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் அரசும் அறிவுறுத்தி வரும் நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் இதுகுறித்து கூறியபோது, ‘காய்கறி மற்றும் மளிகைக்கடைக்கு வருபவர்கள் குடை கொண்டு வர வேண்டும் என்றும், குடைகள் இடிபடாமல் இருக்க ஒரு மீட்டர் இடைவெளியில் பொதுமக்கள் நின்றால் தானாகவே சமூக இடைவெளி கிடைத்துவிடும் என்றும் கூறியிருந்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியரின் இந்த ஐடியா குறித்து நடிகை கஸ்தூரி கூறியபோது, ’சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க எல்லோரும் குடை பிடிக்க வேண்டும் என்று சேலம் ஆட்சியர் கூறியது நல்ல ஐடியா என்றும் அர்த்தராத்திரியில் குடைபிடித்தால் அற்பமில்லை, ஆரோக்யம் ! புதுமொழி! என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த டுவிட்டர் பயனாளி ஒருவர் ’இது கேரளாவின் ஐடியா என்றும் கேரளாவில் ஏற்கனவே குடை கொண்டு செல்வது வழக்கமாகியுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த கஸ்தூரி, ‘யார் முதலில் செய்திருந்தாலும் மொத்தத்தில் அருமையான யோசனை, அனைவரும் பின்பற்றக்கூடிய எளிய நல்ல விஷயம். மழையும் வெயிலும் மாறி மாறி நம்மை குழப்பும் இந்த சமயத்துக்கு ஏற்ற யோசனையும் கூட என்று தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும்- சேலம் ஆட்சியர் .
— Kasturi Shankar (@KasthuriShankar) April 29, 2020
Good idea!
அர்த்தராத்திரியில் குடைபிடித்தால் அற்பமில்லை, ஆரோக்யம் ! புதுமொழி! #coronaparithabangal