ஊரே உங்களை வாழ்த்தும்: அஜித், விஜய் ரசிகர்களுக்கு கஸ்தூரி அறிவுரை

  • IndiaGlitz, [Tuesday,July 30 2019]

சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் தினமும் மோதிக்கொள்வது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாகிவிட்டது. இந்த சண்டையை சம்பந்தப்பட்ட இரு நடிகர்களும், மற்ற திரையுலகினர்களும் அவ்வபோது எடுத்து கூறியும் இந்த சண்டை, சமூக வலைத்தளங்கள் இருக்கும் வரை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சற்று எல்லைமீறி அஜித், விஜய் ஆகிய இருவரையும் பாடையில் ஏற்றும் ஹேஷ்டேக்கை இருதரப்பினர்களும் டிரெண்டாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டது குறித்து பல திரையுலகினர் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்தனர். இதனையடுத்து இருதரப்பு ரசிகர்களும் ஓரளவு சமாதானம் ஆகி அதன்பின்னர் 'லாங்லிவ்' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கினர்

இந்த நிலையில் அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் தன்னுடைய கருத்தை தைரியமாக கூறிவரும் நடிகை கஸ்தூரி இந்த விவகாரம் குறித்து கூறுகையில், ''நெகட்டிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் அஜித், விஜய் ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும்'' என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

உலகில் சமூக வலைத்தளங்களால் பல புரட்சிகள் ஏற்பட்டுள்ளது. ஏன் தமிழகத்திலேயே ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்கள் வெற்றி அடைய சமூக வலைத்தளங்கள்தான் காரணம். இந்த வலைத்தளங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள் நினைத்தால் ஒரு அரசையே நடுநடுங்க செய்யும் அளவுக்கு சக்தி இருப்பதாகவும், அதனை சரியாக பயன்படுத்தினால் அதில் கிடைக்கும் பயன்கள் எண்ணற்றது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.