காவலரை கடுமையாக திட்டிய பெண் வக்கீல்...! கடுப்பாகி டுவிட் போட்ட கஸ்தூரி...!
- IndiaGlitz, [Monday,June 07 2021]
காவல் அதிகாரிகளை கடுமையாக பேசிய, பெண் வக்கீல் மீது 7 துறைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மருத்துவத்திற்காக மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றுபவர்களை, காவல் துறையினர் கண்டித்து அபராதமும் செலுத்தச் சொல்கின்றனர்.
இதேபோல் சென்னை, சேத்துப்பட்டில் தீவிர வாகனப் பரிசோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது முகக்கவசம் அணியாமல், காரில் சென்ற ப்ரீத்தி என்ற பெண்ணை மறித்த காவல் துறையினர், ரூ.500 அபராதம் விதித்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பெண்ணின் தாயார், தனுஜா கத்துலா சம்பவ இடத்திற்கு சொகுசு காரில் விரைந்து வந்துள்ளார்.
அப்போது கடுமையான வார்த்தைகளால், காவலர்களை விளாசியுள்ளார் அப்பெண்மணி. அவர் கூறியிருப்பதாவது, நான் அட்வகேட்... உன் யூனிபார்மை கழட்ட வச்சுடுவேன். எல்லா கார்லயும் வரவங்களையும் கேளுடா, யார்டா நீ..? என்று தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் முகக் கவசம் அணிய முடியாது, அபராதம் கட்ட இயலாது என காவலர்களை ஒருமையில் பேசிய காணொளிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து பெண் வக்கீலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.கோவிட் காலத்திலும் உயிரைப்பணயம் வைத்து காவல் அதிகாரிகள் வேலை செய்து வரும் நிலையில், அட்வகெட் இந்த மாதிரி ஒருமையாக பேசியது அவர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.
காவலர்களை கடுமையாக பேசிய பெண் மீது, கொரோனா தொற்றை பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், அரசின் உத்தரவை மீறுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகள் ப்ரீத்தி மீதும் ஊரடங்கை மீறி வெளியில் வந்துள்ளதாக, எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எந்த ஒரு மதிப்பான வழக்கறிஞரும் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். ஒரு பெண்ணாகவும், வழக்கறிஞராகவும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார். தன் உயிரையும் துச்சமாக நினைத்து, பொதுமக்களுக்காக முன்களப்பணியாளர்களாக போராடி வரும் காவலர்களிடம், ஒருசிலர் இம்மாதிரி அநாகரிகமாக நடந்து கொள்வது வேதனைக்குரியதாக உள்ளது.
No advocate worth their salt would behave like this. As a woman and a lawyer, I am shocked. This person is NOT the norm. Please do not malign us all .
— Kasturi Shankar (@KasthuriShankar) June 6, 2021
RESPECT to @ChennaiTraffic warriors for maintaining their standards even under provocation. @chennaipolice_ https://t.co/o8lQlC2tgA