ஸ்டாலின் சாலைமறியலை கலாய்த்த கஸ்தூரி: திமுகவினர் டென்ஷன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று தமிழக சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்பதும் அதன் பின்னர் அனைவரும் சாலைமறியல் செய்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் தயவால் இயங்கி வரும் இந்த அரசை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக திமுக எம்.ஏ.க்கள் நேற்று நடத்திய இந்த போராட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பு மாறி மாறி தமிழக மக்களிடம் இருந்தும் அரசியல் விமர்சகர்களிடம் இருந்தும் கருத்துக்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சமூக அவலங்கள் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ஸ்டாலின் மறியல் குறித்து தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் 'ரோட்டுல மறியல். “யார் அப்பன் வீட்டு காசு" ன்னு கோஷம். எல்லாம் #பழக்கதோஷம். அடுத்தவாரிசுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த பதிவுக்கு திமுக தரப்பில் இருந்து பல கண்டனங்கள் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒருசில கருத்துக்கள் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனது கருத்துக்கு கிடைத்து வரும் எதிர்ப்புகளுக்கு பின்னர் கஸ்தூரி மீண்டும் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில், 'முந்தைய டீவீட்டுக்கு மன்னிக்கவும். அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்' என்று கூறியுள்ளார்.
ரோட்டுல மறியல். யார் அப்பன் வீட்டு காசு" ன்னு கோஷம். எல்லாம் #பழக்கதோஷம். 😬😆 #அடுத்தவாரிசுகள் #DMK #TNassembly #MLAforsale
— kasturi shankar (@KasthuriShankar) June 14, 2017
முந்தைய டீவீட்டுக்கு மன்னிக்கவும். அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்.
— kasturi shankar (@KasthuriShankar) June 14, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com