கமல் பாணியில் குரல் கொடுத்த கஸ்தூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் நேற்று, ஊழல் இருக்கும் வரை சுதந்திரம் பெற்றாலும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திர போராட்டத்துக்கு துணிச்சல் உள்ளவர்கள் வாரும் என்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்புக்கு ஏராளமானோர் ஆதரவு கொடுக்க தயார் என்று பதிலளித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, கமல்ஹாசனின் டுவிட்டுக்கு அவர் பாணியிலேயே, 'குரல்கொடுத்தால் கைகொடுக்க காத்திருக்கும் கண்மணிகள் கோடியுண்டு. ஓடிவருவர் கட்டளைக்கு கரைப்புரண்டே' என்று பதிலளித்துள்ளார்.
மேலும் 'மதவாதம், ஜாதியம் பேசுவோர், மரம் வெட்டுவோருக்கு போலி சாமியாருக்குக் கூட 4 பேர் பின்னால் செல்கின்றபோது, நல்லது செய்வதாக கிளம்பும் 4 பேர் சென்றால் தவறு இல்லை என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்.
ஊழல் ஆட்சிக்கு எதிராகவும், முதல்வர் ராஜினாமா செய்திட ஏன் மற்ற கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்ற கமல் கேள்விக்கு, 'அதிமுக எம்எல்ஏ-க்கள் கூவத்தூரில் பணம் பெற்றதாக வெளியான விஷயம் முதல் குட்கா ஊழல் உள்பட பல விஷயங்களில் இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக போன்ற எதிர்க்கட்சிகள் தினந்தோறும் வலியுறுத்தி வரும் நிலையில் கமல் தனது டுவீட்டில் ஏன் அப்படி கூறினார்? என்றும் கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
The youth of TN are ready and waiting to work towards a new future. What do you have in mind, Kamal sir? @ikamalhaasan https://t.co/FdpGeEuUtu
— kasturi shankar (@KasthuriShankar) August 15, 2017
குரல்கொடுத்தால் கைகொடுக்க
— kasturi shankar (@KasthuriShankar) August 15, 2017
காத்திருக்கும் கண்மணிகள்
கோடியுண்டு . ஓடிவருவர்
கட்டளைக்கு கரைப்புரண்டே. https://t.co/UOTlnVXD3N
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments