யார் பலசாலி? ரஜினியின் பதிலுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது 'பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி' குறித்த கேள்விக்கு பதிலளித்தார். இந்த பதிலில் அவர், 'பத்து பேர் சேர்ந்து ஒருவரை போரில் எதிர்க்கின்றார் என்றால் அந்த பத்து பேர் பலசாலியா? அல்லது அந்த பத்து பேரை எதிர்க்கும் ஒருவர் பலசாலியா? என்று பதிலளித்தார்.
இந்த பதிலில் எதிர்க்கும் பத்து பேர்களை சமாளிக்கும் பிரதமர் மோடியே பலசாலி என்று அர்த்தத்தில் ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினியின் இந்த பதிலுக்கு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
கௌரவர்கள் பலசாலிகள். அவரை எதிர்த்து போரிட்ட பாண்டவர்களுக்கு படைபலம் குறைவு. ராவணன் பலசாலி. ராமரின் வானரசேனைக்கு அவ்வளவு வலிமை இல்லை. பலம் வெல்வதில்லை, தர்மமே வெல்லும் என்பது சான்றோர் வாக்கு என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
கௌரவர்கள் பலசாலிகள். அவரை எதிர்த்து போரிட்ட பாண்டவர்களுக்கு படைபலம் குறைவு.
— Kasturi Shankar (@KasthuriShankar) November 13, 2018
ராவண பலசாலி. ராமரின் வானரசேனைக்கு அவ்வளவு வலிமை இல்லை.
பலம் வெல்வதில்லை, தர்மமே வெல்லும் என்பது சான்றோர் வாக்கு .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments