ரஜினி குறித்து கஸ்தூரி போட்ட டுவீட்.....! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த் சிகிச்சைக்காக எதற்கு அமெரிக்க சென்றுள்ளார் என்று நடிகை கஸ்தூரி போட்ட டுவீட்டிற்கு, நெட்டிசன்கள் பலரும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
அண்மையில் உடல் சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்க சென்றிருந்தார். இவர் குறித்த புகைப்படங்களும் சமூக வைரலாகி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "இந்தியாவில் இல்லாத மருத்துவமனைகள் அமெரிக்காவில் உள்ளதா...? இவருக்கு அமெரிக்க செல்ல எப்படி அனுமதி கிடைத்தது...? இந்த விஷயம் குறித்து ரஜினி தெளிவுபடுத்த வேண்டும் என்று டுவிட்டரில் கூறியிருந்தார்.
ஒருவருக்கு உடல்நல பரிசோதனை, மருத்துவம் குறித்து வெளியில் செல்வது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதை உங்களிடம் விளக்க வேண்டும் என்று என்ன அவசியம். உங்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கேள்வி கேட்டால், நீங்கள் பதில் கூறுவீர்களா...? என பலரும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.
ரஜினி தன்னுடைய தனியுரிமையை பாதுக்கப்பதற்காக அமெரிக்க சென்றிருக்கலாம். ஒருவரின் அனுமதியில்லாமல், அவருடைய மருத்துவ காரணங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவது மிகவும் தவறானதாகும். மத்திய அரசு மற்றும் மாநில அரசு செயல்படுத்த வேண்டிய பல விஷயங்கள் இங்கு உள்ளது. நீங்கள் பாரபட்சம் பார்க்காமல் ஒரு செயலுக்காக பேசக்கூடிய பெண் என்றால், இது குறித்து பேசுங்கள். ரஜினி அமெரிக்க எப்படி சென்றிருப்பார் என்ற விஷயம் கட்டாயமாக தெரியவேண்டுமென்றால், அமெரிக்க குடியேற்ற அலுவலகத்திடம் கேளுங்கள். நீங்கள் விளம்பரம் ஆக வேண்டும் என்பதால், இப்படியெல்லாம் டுவீட் போடாதீர்கள்" என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
If you are really care abt how he was allowed to travel, ask US Immigration, not Rajini....He got permission, they allowed and he flew there...simple as that...if u have guts, go and ask US immigration guys rather than tweeting for cheap publicity.
— Suresh (@sureshfair) June 27, 2021
So many Problems needs to be addressed by Central Govt and State Govt.Are they addressed all issues. If you are true unbiased lady kindly ask Central and State Govt. That is the most important need of the Hour. Rajni sir must be goinig with approval approval from Central govt.
— Ganapathy (@Ganapathy01010) June 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments