தனுஷ்-ஐஸ்வர்யா இணைந்துவிட்டார்களா? கஸ்தூரிராஜா கூறிய பதில்!
- IndiaGlitz, [Sunday,October 09 2022]
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் இருவரும் குழந்தைகளுக்காக இணைந்து விட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’எதுவாக இருந்தாலும் சந்தோசம் தான்’ என்று கூறினார்.
பிள்ளைகளுக்கு இடையூறு என்றால் எங்களுக்கு இடையூறு தான் என்றும், பிள்ளைகள் சந்தோசமாக இருந்தால் எங்களுக்கும் சந்தோஷம் தான் என்றும் பிள்ளைகளுடைய பணம் காசு எதுவும் எனக்கு தேவையில்லை என்றும் பிள்ளைகளுடைய சந்தோசம் மட்டுமே எங்களுக்கு முக்கியம் என்றும் கூறியுள்ளார்
மேலும் யாருக்கும் அறிவுரை கூறும் இடத்தில் நாங்கள் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் என்னுடைய நான்கு பிள்ளைகளும் ஒருவருக்கு கூட எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்பதை என்னால் நிச்சயம் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.