கஸ்தூரிராஜாவின் திகில் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கிராமப்புறத்து திரைப்படங்களை அதிகம் இயக்கிய இயக்குனர் கஸ்தூரிராஜா முதல்முறையாக திகில் படம் ஒன்றை இயக்கவுள்ளார். பாண்டிமுனி' என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'ஆரண்ய காண்டம்' மாயாவி போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்து இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியதாவது: இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இதுவரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.
சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி. அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது. சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும்.
இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி. படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது' என்று கூறியுள்ளார்.
ஜாக்கிஷெராப், மேகாலி, நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். இந்த படம் கஸ்தூரிராஜாவின் 23வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com