வருடக்கணக்கில் யோசிக்கும் ரஜினியை வலிய போய் சந்தித்த கஸ்தூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கலாய்த்தவர்கள், திட்டியவர்கள், விமர்சனம் செய்தவர்கள் கூட அவரை நேரில் பார்த்தால் அவரது அன்புக்கு சரண் அடைந்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கலாய்த்த கஸ்தூரி நேற்று ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்று திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கஸ்தூரி சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ''நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவரை... 'போர்' அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது...''என்று கூறியிருந்தார். கஸ்தூரியின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென ரஜினியின் வீட்டுக்கு சென்ற கஸ்தூரி அவரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை பெற்றார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ரஜினியை நேரில் சந்தித்ததன் மூலம் அவருடைய அரசியல் பார்வை குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொண்டேன்' மனதிற்கு நிம்மதியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com