இதை போய் 4500 ரூபாய்க்கு வாங்கின முட்டாள் நீங்க தான்.. கஸ்தூரி வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கஸ்தூரி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரூபாய் 4500க்கு வாங்கிய செருப்பு டேமேஜ் ஆகிவிட்டதாக பதிவு செய்த நிலையில் இந்த செருப்பை நான் 150 ரூபாய்க்கு கூட வாங்க மாட்டேன், 4500 ரூபாய்க்கு வாங்கின முட்டாள் நீங்கள்’ என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை கஸ்தூரி சமூகத்தில் நடக்கும் தவறுகளை தைரியமாக தனது சமூக வலைத்தளத்தில் சுட்டி காட்டுவார் என்பதும் அவர் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் தனது கருத்தை தெரிவிப்பதில் போல்டானவர் என்று பெயர் எடுத்தவர் என்பதும் பலர் அறிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தான் ஒரு செருப்பு ரூ4500க்கு வாங்கினேன், ஆனால் அந்த செருப்பு இரண்டே மாதத்தில் டேமேஜ் ஆகிவிட்டதாகவும் இப்படி ஒரு மோசமான கம்பெனி செருப்பை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் தெரிவித்தார்.
பொதுவாக நான் 399 முதல் 999 வரைக்குள் தான் செருப்புகள் வாங்குவேன் என்றும் ஆனால் ஆச்சரியமாக நான் 4500 ரூபாய்க்கு வாங்கிய செருப்பு எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துவிட்டது என்றும் இது போன்ற தரமற்ற செருப்புகளை விற்பனை செய்தால் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடும் என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
ஒரு நல்ல எண்ணத்திற்காக விழிப்புணர்வு வீடியோவை நடிகை கஸ்தூரி பதிவு செய்த நிலையில் இதற்கும் சில நெட்டிசன்கள் குதர்க்கமான கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர். ஒருவர் ’இந்த செருப்பு கேவலமான நிறம் மற்றும் மாடல் உள்ளது என்றும் இதை நான் 150 ரூபாய்க்கு கூட வாங்க மாட்டேன். நீங்கள் 4500 ரூபாய்க்கு வாங்கிய முட்டாள் என்றும் பதிவு செய்துள்ளார்.
அதேபோல் இன்னொருவர் ’சிலம்புக்காக கொதித்து எழுந்தாள் கண்ணகி, செருப்புக்காக கொதித்து எழுந்தாள் இந்த கஸ்தூரி.... என கிண்டல் செய்துள்ளார். இருப்பினும் பலர் கஸ்தூரியின் இந்த பதிவை பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com