இன்னும் எத்தனை உயிர் வேணும், வயிறு எரிகிறது. கஸ்தூரி ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசின் அதிகாரம், மாநில அரசின் கோழைத்தனம் காரணமாக நீட் விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மன அழுத்தத்தில் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் நிலையில் அரியலூர் அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது.
இந்த நிலையில் அனிதாவின் மரணத்திற்கு கோலிவுட் திரையுலகினர் அனைவரும் ஆவேச கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே சமூக பிரச்சனைக்கு குரல் கொடுத்து வரும் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தனது ஆத்திரத்தை காட்டமாகவே காட்டியுள்ளார்.
எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது என்று ஒரு டுவீட்டும், இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறீர்கள்? 1176/1200 எடுத்தவள் வாழ்க்கை 0/18 பதினெட்டில் சூனியம் ஆகிவிட்டது என்று இன்னொரு டுவீட்டும் பதிவு செய்துள்ளார். இனிமேலும் அரசியல்வாதிகள் நமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருப்பது மூடத்தனம் என்றும் ஜல்லிக்கட்டு புரட்சி போல் இன்னொரு புரட்சி வெடிக்க வேண்டும் என்றும் கஸ்தூரியின் சமூக வலைத்தளப்பக்கத்தில் பலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறீர்கள்? 1176/1200 எடுத்தவள் வாழ்க்கை 0/18 பதினெட்டில் சூனியம் ஆகிவிட்டது. 1/2 #NEETkillsAnitha pic.twitter.com/5x5ZRtLyTB
— kasturi shankar (@KasthuriShankar) September 1, 2017
எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது. #NEETkillsAnitha
— kasturi shankar (@KasthuriShankar) September 1, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments