கமல் அணிந்த ஆடைக்கு காரணம் கண்டுபிடித்த கஸ்தூரி

  • IndiaGlitz, [Wednesday,November 08 2017]

நடிகை கஸ்தூரி கடந்த சில நாட்களாகவே அரசியல் குறித்த கருத்துக்களை பரபரப்பாக பேட்டிகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு 'மையம் விசில்' செயலியை அறிமுகம் செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அவர் அணிந்திருந்த ஆடை வித்தியாசமாக இருந்தது. வழக்கமாக கருப்பு சட்டை மற்றும் வேஷ்டி அணிவது கமலுக்கு பிடித்த உடையாக இருந்தது. ஆனால் நேற்றைய நிகழ்ச்சியின்போது வட இந்தியர் பாணியில் பதான் சூட் அணிந்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த உடை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய கஸ்தூரி, 'தமிழ், வேட்டி கட்டாமல் பதான்சூட் போட காரணம்? ஒருவேளை டெல்லிதான் குறியோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசனின் அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அவர் தேசிய அரசியலையும் கையாள போகிறார் என்பது புரியும். இதற்கு சான்றாக நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து கூறியதையும் எடுத்து கொள்ளலாம். 

More News

கமல்ஹாசனுக்கு அரசியல் ஞானம் கிடையாது: எச்.ராஜா

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை அவரே நேற்றைய பிறந்த நாளில் அறிவித்துவிட்டார். நேற்று மக்களுடன் தொடர்பு கொள்ள 'மையம் விசில்' என்ற செயலியை அறிமுகம் செய்த கமல்,

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

கடந்த ஆண்டு வெளிவந்த ஒருநாள் கூத்து' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா நடித்த இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார்.

கமல்ஹாசன் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் 

கடந்த ஆண்டு இதே நாள் மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் அறிவித்த இந்த அறிவிப்புக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்

சுசீந்திரனின் 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரை முன்னோட்டம்

வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை பல வெற்றி படங்களை இயக்கிய கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் தற்போது இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'.

'கபடி' களத்தில் குதிக்கும் பெண் இயக்குனர்

அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகிய 'அம்மா கணக்கு' படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.