இன்றைய சிஎஸ்கே மேட்சில் முக்கிய வீரர் இல்லையா? கலங்கும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 2021 தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் அனைத்தும் இந்த வாரம் முடிவடைய இருக்கிறது. மேலும் ஐபிஎல்-இல் இடம்பிடித்துள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெறுவதற்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டும் என்ற நிலைமையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் ஏற்கனவே தகுதிச்சுற்றில் இடம்பிடித்த தோனி தலைமையிலான சென்னை சிஎஸ்கே மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் இரு அணிகளுக்கும் இடையிலான 50 ஆவது லீக் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தப் பேட்டியில் சென்னை சிஎஸ்கே சார்பாக ஓபனிங் இறங்கும் டூபிளசிஸ் இன்று விளையாட மாட்டார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
காரணம் இறுதியாக நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டூபிளசிஸ் பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமான் மீது மோதியபோது அவருக்கு கழுத்துப் பகுதியில் அடிப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவுட்டாகி களத்தை விட்டு வெளியேறிய டூபிளசிஸ் பீல்டிங்கிற்குற்கு கூட வரவில்லை. அவருக்குப் பதிலாக ராபின் உத்தப்பா பீல்டிங் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தக் காரணத்திற்காக டூபிளசிஸ் இன்று விளையாடுவாரா என்பதில் சிலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்த சிஎஸ்கேவின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் டூபிளசிஸ் வலைப்பந்து பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் இன்று விளையாடுவார் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார். இந்தத் தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com