சென்னை காசி தியேட்டரின் முடிவால் விஜய் ரசிகர்கள் சோகம்

  • IndiaGlitz, [Monday,October 16 2017]

சென்னை காசி தியேட்டர் என்பது ரசிகர்கள் மற்றும் செலிபிரிட்டிகளின் விரும்பத்தக்க திரையரங்கம். புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் இந்த தியேட்டர் உள்ள சாலையே கலகலப்பாக இருக்கும்.

இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று இந்த திரையரங்கில் 'மெர்சல்' திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்காக புதிய மாற்றங்கள் செய்து புதுப்பொலிவுடன் காணப்படுகிறது

ஆனால் திடீரென இந்த திரையரங்கத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வரும் தீபாவளிக்கு 'மெர்சல்' இந்த தியேட்டரில் திரையிடப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெர்சல் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் திருப்தி தரவில்லை என்பதால் வரும் தீபாவளி தினத்தில் 'மெர்சல்' திரைப்படம் எங்கள் தியேட்டரில் திரையிடப்படவில்லை என்பதை தெரிவித்து கொள்வதாகவும் இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டால் உடனே தகவல் அளிக்கின்றோம் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காசி திரையரங்கின் இந்த முடிவால் தளபதியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருப்பினும் இன்று அல்லது நாளைக்குள் தயாரிப்பு தரப்பும், திரையரங்கு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி 'மெர்சல்' தீபாவளியை இந்த திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட வழிவகை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.