வீட்டை விட்டு ஓடி வந்த 10ஆம் வகுப்பு மாணவி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த கொடுமை
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டைவிட்டு கோபித்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் ஏதாவது ஒரு ரயிலில் ஏறி வெளியூருக்கு சென்று வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ரயில் ஏறுவதற்காக ரயில்வே நிலையத்தில் காத்திருந்தார். ஆனால் ரயில்கள் வந்து கொண்டும், சென்று கொண்டும் இருக்க எந்த ரயிலில் ஏறுவது? எங்கே செல்வது? என்று தெரியாமல் அவர் குழப்பத்தில் இருந்துள்ளார்
பல மணி நேரம் ஒரே இடத்தில் அந்த சிறுமி ரயில்வே நிலையத்தில் இருந்ததை நோட்டமிட்ட ஒரு இளைஞன், அந்த சிறுமியிடம் அன்பாக பேசி உள்ளார். தான் ஜம்மு-காஷ்மீரில் சேர்ந்தவன் என்றும், தற்போது ஜம்மு காஷ்மீர் செல்ல இருப்பதாகவும், தன்னுடன் வந்தால் நல்ல வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் அந்த இளைஞன் அன்புடன் பேச, அந்த சிறுமி அந்த இளைஞனை நம்பியுள்ளார்
அதன்பிறகு ஸ்நாக்ஸ் டீ போன்றவை வாங்கி கொடுத்த இளைஞன் சிறிமியிடம் நீண்ட நேரம் தன்னுடைய குடும்பக்கதையை கூறியுள்ளான். ஒருவரை ஒருவர் அவர்களது குடும்ப கதையை பேசியபடி இருவரும் அன்னியோன்யமாக இருந்ததால் அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை
இந்த நிலையில் இரவு நேரம் நெருங்க நெருங்க ரயில்வே பிளாட்பாரத்தில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த சிறுமியை காலியாக இருந்த ரயில் பெட்டிக்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மீண்டும் ரயில்வே பிளாட்பாரத்திற்கு வந்த அந்த சிறுமி அழுது கொண்டிருக்க அந்த சிறுமியை அந்த இளைஞன் தேற்றிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது
அப்போது அந்தப் பக்கமாக ரோந்து வந்த போலீஸ்காரர் ஒருவர் அவர்களிடம் விசாரணை செய்தபோது இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்தது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை செய்தனர். பெண் போலீசார் ஒருவர் அந்த சிறுமியிடம் விசாரணை செய்தபோது தன்னை அந்த இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்ததை அழுது கொண்டே கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த இளைஞனிடம் போலீஸ், தனது பாணியில் விசாரித்தபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரின் பெயர் மோகன்லால் என்பதும், 27 வயதான அவர் சென்னையில் பணிபுரிந்து வருவதாகவும், விடுமுறைக்காக ஜம்மு காஷ்மீர் செல்ல ரயில்வே நிலையத்திற்கு வந்த போதுதான் இந்த சிறுமியை பார்த்து தவறாக நடந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com