இதுவொரு ஆரம்பம்தான்: காஷ்மீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் வீடியோ எச்சரிக்கை
- IndiaGlitz, [Friday,February 15 2019]
காஷ்மீரில் நேற்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து ஒன்றை வெடிகுண்டுகள் நிரம்பிய தீவிரவாதியின் கார் மோதியதால் பேருந்தில் பயணம் செய்த 39 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்,
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதி அடில் அகமது தார் என்பவன் பேசியதாவது:
எனது பெயர் அடில், நான் சமீபத்தில்தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்தேன். இந்த அமைப்பில் சேர்ந்த ஒருசில மாதங்களில் இந்த தாக்குதல் நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன்பாக, நான் சொர்க்கத்தில் இருப்பேன்.. இதுதான் காஷ்மீர் மக்களுக்கு எனது கடைசி மெசேஜ் என்று கூறியுள்ளான்.
மேலும் 'இந்த தாக்குதல் நான் இஸ்லாமியத்திற்கு செய்த சேவை என்றும், எனது பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றும் அடில் அகமது தார் கூறியுள்ளான். மேலும் இந்த தாக்குதல் ஒரு ஆரம்பம் தான் என்றும், இன்னும் இதுபோன்ற தாக்குதலை நடத்த நூற்றுக்கணக்கானோர் பயிற்சி பெற்று வருவதாகவும் அவன் மேலும் இந்த வீடியோவில் கூறியுள்ளான்.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் ஆவேசமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
Fiadyeen #Aadil who carried #Fidayeen attqck on CRPF on Highway#Pulwama #Kashmir
— Sajid Khan Afridi (@SajidKhanAfd) February 15, 2019
pic.twitter.com/rkc6L7Er7K